/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மேய்ச்சல் கால்நடைகள் வளர்ப்போர்
/
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மேய்ச்சல் கால்நடைகள் வளர்ப்போர்
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மேய்ச்சல் கால்நடைகள் வளர்ப்போர்
மழையை எதிர்பார்த்து காத்திருக்கும் மேய்ச்சல் கால்நடைகள் வளர்ப்போர்
ADDED : நவ 15, 2024 06:47 AM

கடலாடி: கடலாடி சுற்றுவட்டார கிராமங்களில் மேய்ச்சல் கால்நடை வளர்ப்போர் அதிகளவு உள்ள நிலையில் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
மாவட்டத்தில் இதுவரை பெய்த மழை திருப்தி அளிக்காததால் கூடுதல் மழையை எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தனர். மேய்ச்சல் கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள் கூறியதாவது:
நாங்கள் 100 முதல் 150 பசுக்கள், காளை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகளை மேய்ச்சலுக்காக கடலாடி உள்ளிட்ட தரிசு நில வயல்களில் விடுகிறோம். நெல், மிளகாய், சிறு குறு தானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில்
அவற்றில் மேயவிடாமல் தரிசு நிலங்கள் மற்றும் பயன்பாடற்ற புல் தரைகளில் மேய்ச்சலுக்கு விடுகிறோம்.
ஆடு, மாடுகள் ஆங்காங்கே உள்ள சிறு பள்ளங்களில் தேங்கிய தண்ணீரிலும், குட்டைகளிலும் தாகம் தீர்த்துக் கொள்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக மழை பெய்ததால் எதிர்பார்த்த தண்ணீர் கிடைத்தது. நடப்பு ஆண்டில் விவசாயத்தைப் போலவே கால்நடைகளுக்கும் தண்ணீருக்காக காத்திருக்கிறோம். கோடையில் கால்நடைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. வருண பகவான் பார்வைக்காக காத்திருக்கிறோம் என்றனர்.