/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மானிய விலையில் பசுந்தாள் உர விதை
/
மானிய விலையில் பசுந்தாள் உர விதை
ADDED : ஆக 02, 2025 10:56 PM
திருவாடானை : மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகள் விநியோகம் துவங்கியது.
திருவாடானை வட்டாரத்தில் 26 ஆயிரம் எக்டேரில் விவசாயிகள் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பசுந்தாள் உர விதைகள் திருவாடானை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தில் 3.5 டன் இருப்பு உள்ளது. இது குறித்து வேளாண்மை உதவி இயக்குநர் தினேஷ்வரி கூறியதாவது:
பசுந்தாள் உர விதைகள் ஒரு ஏக்கருக்கு ஒரு விவசாயிக்கு 20 கிலோ வீதம் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட உள்ளது.
விவசாயிகளை பசுந்தாள் உர விதைகளை பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம் மண்ணில் உயிர் கரிம சத்தையும் பயிர் மகசூலையும் அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
விவசாயிகள் அனைவரும் பசுந்தாள் உர விதைகளை வாங்கி பயனடையலாம் என்றார்.