/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசுமை ராமேஸ்வரம் துவக்க நாள் விழா
/
பசுமை ராமேஸ்வரம் துவக்க நாள் விழா
ADDED : பிப் 01, 2025 05:04 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் 11ம் ஆண்டு பசுமை ராமேஸ்வரம் அமைப்பு துவக்க விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.
ராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் அமைப்பு மூலம் பல ஆண்டுகளாக மூடிக் கிடந்த புனித தீர்த்த கிணறுகள், குளங்களை சீரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது. இதன் மூலம் ராமேஸ்வரம் தீவில் நீர்நிலைகள் வறண்டு போகாமல் பாதுகாத்தனர்.
மேலும் பெண்ககளுக்கு தையல் பயிற்சி, இயற்கை உரங்கள் தயாரித்தல், யோகா கலை பயிற்சி மரக்கன்றுகள் நடுதல் சுகாதாரம் பாதுகாத்தல் உள்ளிட்ட பல பயிற்சிகளை வழங்கினர். இந்த அமைப்பின் 11ம் ஆண்டு துவக்க விழா நேற்று முன்தினம் ராமேஸ்வரத்தில் நடந்தது. விழாவில் பல கிராமங்களில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மக்கள், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதில் ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு செயலாளர் வாசுதேவ், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பேரன் ஷேக் சலீம், பசுமை நிர்வாகிகள் சரஸ்வதியம்மாள், ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.