ADDED : செப் 23, 2025 11:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்; ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் எண்ணெய் நிறுவனம், எரிவாயு முகவர்களுடன் மாதாந்திர குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை (செப்.25) நடக்கவுள்ளது.
இதில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முது குளத்துார் பகுதிக்கு உட்பட்ட மக்கள் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பான குறைகள், கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.