/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பசும்பொன்னில் நிரந்தர மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா
/
பசும்பொன்னில் நிரந்தர மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா
பசும்பொன்னில் நிரந்தர மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா
பசும்பொன்னில் நிரந்தர மண்டபம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுவிழா
ADDED : பிப் 17, 2024 10:55 PM

கமுதி: -கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவின் போது இரு நுழைவு வாயில்களிலும் ஆண்டுதோறும் தற்காலிக பந்தல் அமைக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து பொதுமக்கள் நலன் கருதி ரூ.1.55 கோடியில் நிரந்தர மண்டபம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இதையடுத்து நிரந்தர மண்டபங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கலெக்டர் விஷ்ணுசந்திரன் தலைமை வகித்தார்.
அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், கயல்விழி அடிக்கல் நாட்டினர்.
எம்.எல்.ஏ.,க்கள் காதர்பாட்ஷா, முருகேசன், கருமாணிக்கம், தமிழரசி, ராஜா, கமுதி ஊராட்சி ஒன்றிய தலைவர் தமிழ்ச்செல்வி உட்பட கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.