/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழையால் நிரம்பியது அரசு ஊருணி வீடுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
/
மழையால் நிரம்பியது அரசு ஊருணி வீடுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
மழையால் நிரம்பியது அரசு ஊருணி வீடுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
மழையால் நிரம்பியது அரசு ஊருணி வீடுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு
ADDED : டிச 25, 2025 05:28 AM

ஆர்.எஸ்.மங்கலம்: மழையால் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஊருணி நிரம்பியதால் குடியிருப்பு பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்டில் இருந்து சிலுகவயல் செல்லும் ரோட்டில் அரசு ஊருணி அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த ஊருணியில் தேக்கப்படும் தண்ணீரால் ஆர்.எஸ்.மங்கலம் டவுன் பகுதி மக்கள் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த மக்களும் குளிப்பது, ஆடைகள் துவைப்பது, கால்நடைகளின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஊருணி கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பெய்த மழையால் வாய்க்காலில் நீர் வரத்து அதிகரித்ததால் ஊருணி முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள கிணறுகள், திறந்த நிலை கிணறுகள் உள்ளிட்டவைகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
வழக்கமாக இந்த ஊருணி முழு கொள்ளளவை எட்டும் ஆண்டுகளில் அடுத்த மழைக்காலம் துவங்கும் வரை ஊருணியில் நீர் இருக்கும். இதனால் அடுத்த ஆண்டு பருவமழை தாமதமாக துவங்கினாலும் ஊருணியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு போதிய நீர் இருக்கும் என்பதால் குடியிருப்பு வாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஊருணி ஓரங்களில் தேங்கும் குப்பையை சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் அகற்ற நட வடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலி யுறுத்தினர்.

