/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு சணப்பை செடிகள் வளர்ப்பு
/
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு சணப்பை செடிகள் வளர்ப்பு
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு சணப்பை செடிகள் வளர்ப்பு
கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் ஆய்விற்கு சணப்பை செடிகள் வளர்ப்பு
ADDED : ஜூன் 11, 2025 11:05 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில், சோதனை முறையில் சணப்பை பயிர் வளர்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் மானாவாரியாக நெல் சாகுபடி, பருத்தி, மிளகாய் போன்றவைகள் சாகுபடி செய்யப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும். சணப்பை பயிர்களை வளர்க்க விவசாயிகளை ஊக்கப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலக வளாகம் கடலோர உவர் ஆராய்ச்சி மையத்தில் குயவன்குடி அறிவியல் வேளாண் ஆராய்ச்சி நிலையம் விஞ்ஞானிகள் ஆலோசனைப்படி சோதனை அடிப்படையில் சணப்பை செடிகள் மானாவாரியாக வளர்க்கப்படுகிறது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறுகையில், சணப்பை பசுந்தாள் உரமாக நெல் சாகுபடிக்கு முன்பு பயிரிடலாம். குறைந்த பராமரிப்பில் வளரும் சணப்பை பயிர் விதைத்த 45வது நாளில் மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும் போது பயிர்களை மடக்கி உழவு செய்கின்றனர். இதனால் மண் வளம் அதிகரிப்பதுடன், நீர்பிடிப்பு தன்மை அதிகரிக்கும். இதன் மூலம் உரச்செலவு குறையும்.
இதன் காரணமாக மானாவாரியாக சோதனை அடிப்படையில் சணப்பை செடிகள் வளர்க்கிறோம். சணப்பை பயிர்களை 45 நாட்களில் உழவு செய்வதற்கு பதிலாக 90 நாட்கள் வரை காத்திருந்தால் விதைகளையும் பெற முடியும். விதை கிலோ ரூ.50 வரை விற்றும் விவசாயிகள் லாபம் பெறலாம்.
ஆர்வமுள்ள விவசாயிகள் வேளாண் ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொண்டால் சணப்பை செடிகள் வளர்ப்பு முறை, தொழில் நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும் என்றனர்.