/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் பெற வழிகாட்டுதல் முகாம்
/
சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் பெற வழிகாட்டுதல் முகாம்
சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் பெற வழிகாட்டுதல் முகாம்
சிறு, குறு, நடுத்தர தொழில் கடன் பெற வழிகாட்டுதல் முகாம்
ADDED : பிப் 24, 2024 05:55 AM

ராமநாதபுரம், : ராமநாதபுரம் மாவட்ட தொழில் முதலீட்டு கழகம், தாட்கோ, மகளிர் திட்டம் வாழ்ந்து காட்டுவோம் சார்பில் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் சிறு, குறு, நடுத்தர தொழிற் கடன் பெற வழிகாட்டுதல் முகாம் நடந்தது. மாவட்ட மகளிர் திட்டம் வாழ்ந்து காட்டுவோம் திட்ட இயக்குனர் சையது சூலைமான் தலைமை வகித்தார். மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் சர்மிளா, தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். சிறு, குறு தொழில் துவங்க விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
தொழில் முனைவோர்கள் சந்தேகங்களுக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர் அசோக், தொழில் மையம் உதவிப்பொறியாளர் பிரதீப் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.