/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சி செயலர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம்
/
ஊராட்சி செயலர்களுக்கு வழிகாட்டுதல் கூட்டம்
ADDED : அக் 07, 2024 05:04 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்களுக்கு மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பி.டி.ஓ., லட்சுமி தலைமை வகித்தார்.
பருவ மழைக் காலம் துவங்கி உள்ள நிலையில் குடியிருப்பு பகுதிகளில் தாழ்வான பகுதிகளை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வரத்து கால்வாய்களை சீரமைத்தல், குடியிருப்பு பகுதி ரோடுகளை பராமரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
இயற்கை சீற்றங்களால் இடர்பாடுகள் ஏற்படும் போது உடனுக்குடன் அதிகாரிகளுக்கு தெரிவித்து பொதுமக்களுக்கு தேவையான உடனடி நலத்திட்டங்களை பெற்று வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.