தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி ரோட்டோரங்களில் வழிகாட்டி போர்டுகள் சேதம்

 பரமக்குடி ரோட்டோரங்களில் வழிகாட்டி போர்டுகள் சேதம்

 பரமக்குடி ரோட்டோரங்களில் வழிகாட்டி போர்டுகள் சேதம்


ADDED : மார் 26, 2026 07:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 26, 2026 07:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி அருகே மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் குழி தோண்டுபவர்கள் வழிகாட்டி போர்டுகளை சேதப்படுத்துவதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.

மாநில, தேசிய, கிராமப்புற ரோட்டோரங்களில் காவிரி மற்றும் உள்ளூர் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் நடக்கிறது. இதே போல் தனியார் அலைபேசி வயர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் கேபிள் பதிக்கும் பணிகளும் அவ்வப்போது நடக்கிறது. இவர்கள் ஒட்டுமொத்தமாக உயர் அலுவலகங்களில் ரோட்டோரங்களில் பள்ளம் தோண்டி பணி செய்வதற்கு உத்தரவுகளை பெற்று வருகின்றனர்.

இது போன்றவர்கள் அந்தந்த தாலுகா உள்ளிட்ட அலுவலகங்களில் உரிய அனுமதி அல்லது தகவல் கொடுப்பது இல்லை. இதனால் ரோட்டோர வழிகாட்டி போர்டுகள் மற்றும் துாரத்தை காண்பிக்கும் எல்லை கற்கள் என சாய்த்து விட்டு செல்கின்றனர். இதனால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் உண்டாவதுடன் துறை அலுவலர்களும் செய்வது தெரியாமல் சங்கடத்தில் உள்ளனர்.

ஆகவே குழாய் மற்றும் கேபிள் பதிக்கும் நிறுவனத்தினர் ஆங்காங்கே உள்ள எல்லை கல் அல்லது வழிகாட்டி போர்டுகளை பணி முடித்த பின் முறையாக மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us