/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தனித் தீவாக மாறி வருகிறது; குருத்தமண் குண்டு கிராமம் கோடைகாலத்தில் துார்வார கோரிக்கை

ADDED : நவ 27, 2024 06:38 AM

பெரியபட்டினம் : -பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட குருத்தமண் குண்டு கிராமத்திற்கு செல்லும் வழியில் 200 மீ., நீளத்திற்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளதால் தீவு போல உள்ளது.
பெரியபட்டினம் அருகே கப்பலாறு செல்லும் வழியில் குருத்தமண் குண்டு உள்ளது. 200 ஏக்கரில் தரவைப் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையால் முழுவதும் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில் குருத்தமண் குண்டு பகுதியில் அதிகளவு தேங்கிய மழை நீரால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் தண்ணீரை கடந்து செல்வது சிரமமாக உள்ளது. கிராம மக்கள் கூறியதாவது:
பெரியபட்டினம் மன்னார் வளைகுடா கடற்கரைக்குச் செல்லும் வழியில் உள்ள கப்பலாறு தரவைப் பகுதியை கோடை காலத்தில் முறையாக துார்வார வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு குருத்தமண்குண்டு பகுதிக்கு புதிதாக தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்த மழையால் முழுவதும் தார் ரோடு தண்ணீரால் நிரம்பி உள்ளது. இதன் அருகே மெகா பள்ளங்கள் உள்ளதால் அச்சத்துடனும் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கிராமச்சாலையை கடந்து செல்லும் நீரோட்டத்தை அகற்ற துாம்பு பாலம் அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி ரோட்டோரங்களில் நின்று வழிகாட்டி அனுப்பி வைக்கிறோம் என்றனர்.