/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோஜ்மா நகரில் காட்சி பொருளாக ஹைமாஸ் மீனவர்கள் அவதி
/
ரோஜ்மா நகரில் காட்சி பொருளாக ஹைமாஸ் மீனவர்கள் அவதி
ரோஜ்மா நகரில் காட்சி பொருளாக ஹைமாஸ் மீனவர்கள் அவதி
ரோஜ்மா நகரில் காட்சி பொருளாக ஹைமாஸ் மீனவர்கள் அவதி
ADDED : டிச 16, 2024 07:00 AM

சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ரோஜ்மாநகர் மன்னார் வளைகுடா கடற்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளதால் மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.
இங்கு 30 அடி உயரத்தில் 8 எல்.இ.டி., பல்புகள் கொண்ட உயர் கோபுரத்தில் கடந்த ஆண்டு பொருத்தப்பட்டது.
மூன்று மாதங்களில் பல்புகள் தரமற்றதாக இருந்ததால் விரைவில் காட்சிப் பொருளாக மாறியது. கடலாடி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் ஆத்தி கூறியதாவது:
ஒன்றிய பொது நிதியில் கடந்த ஆண்டு ரூ.5 லட்சத்தில் மன்னார் வளைகுடா கடற்கரை அருகே மீனவர்கள் வலை பின்னும் கூடம் வளாகப் பகுதியில் அமைக்கப்பட்ட உயர் கோபுர மின்விளக்கு மூன்று மாதங்களிலே வெளிச்சம் தராமல் முடங்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள ஏராளமான மீனவர்கள் கடலுக்குச் சென்று தொழில் செய்துவிட்டு திரும்பும் போது அவதி அடைகின்றனர். கையில் உள்ள அலைபேசி வெளிச்சத்தில் கரையைக் கடந்து வீடுகளுக்கு செல்கின்றனர்.
எனவே அரசு நிதி வீணடிப்பை தவிர்க்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீனவர்களின் நலனுக்காக விரைவில் ஹைமாஸ் விளக்கில் வெளிச்சம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.