/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ைஹமாஸ் விளக்கு பழுது பக்தர்கள் அவதி
/
ைஹமாஸ் விளக்கு பழுது பக்தர்கள் அவதி
ADDED : டிச 23, 2024 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவெற்றியூரில் கோயில் அருகே ைஹமாஸ் விளக்கு பழுதாகி எரியாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.
திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. இக் கோயில் முன்புள்ள தீர்த்தகுளத்தின் கிழக்கு பகுதியில் ைஹமாஸ் விளக்கு ஒரு மாதத்திற்கு மேலாக எரியவில்லை.
மார்கழி என்பதால் இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் செல்வார்கள்.
அதிகாலையில் குளத்தில் நீராடுவார்கள். ைஹமாஸ் விளக்கு எரியாததால் குளம் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் பெண் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.
பொதுமக்களின் நலன் கருதி ைஹமாஸ் விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தபட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

