/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கைத்தறி விற்பனை கேள்விக்குறி: போதிய ஜவுளி இருப்பு இல்லாத கோ-ஆப் டெக்ஸ் கட்டடம் ஆபத்தான நிலையில்: வாடிக்கையாளர் அச்சம்

UPDATED : அக் 24, 2024 07:34 AM
ADDED : அக் 24, 2024 05:01 AM

பரமக்குடி: பரமக்குடியில் செயல்படும் கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தின் ஜவுளி விற்பனை நிலையத்தில் போதுமான ஜவுளிகள் இருப்பு இல்லாததால் கைத்தறி துணிகள் விற்பனை கேள்விக்குறியாகி உள்ளது.
தமிழகத்தில் கைத்தறி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் கோ -ஆப்டெக்ஸ் நிறுவனம் உருவாக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் பல்வேறு கிளைகள் மூலம் கைத்தறி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பரமக்குடி பெருமாள் கோவில் தெருவில் பல ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்படுகிறது. பரமக்குடி, எமனேஸ்வரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் உட்பட துண்டு, கைலிகள், ஜமுக்காளம் என அனைத்தும் தரமாக உள்ளதால் இங்கு விற்பனை அமோகமாக இருந்தது.
கடந்த சில ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் இயங்கும் விற்பனை நிலையம் முற்றிலும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் ஜவுளிகளை பாதுகாக்க முடியாத சூழலில் குறிப்பிட்ட ரகங்களை மட்டுமே விற்பனைக்கு வைத்துள்ளனர்.
மேலும் மின் சாதனங்களான மீட்டர் பெட்டிகள் உட்பட அனைத்திலும் மழை நீர் கசிந்து பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத சூழல் நிலவுகிறது.
அரசு ஒவ்வொரு ஆண்டும் விழாக் காலங்களில் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு சலுகைகளை அறிவிக்கும் நிலையில் இது போன்ற நிலையற்ற கட்டடத்தால் கைத்தறி விற்பனை கேள்விக்குறியாகி உள்ளது. ஆகவே கைத்தறி நெசவாளர்கள் அதிகம் உள்ள பகுதியில் மாற்று இடத்தில் நிறுவனம் செயல்படும் வகையில் விற்பனையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.