நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி : சாயல்குடியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலாடி ஒன்றியம் சார்பில் நல்வாழ்வு உரிமையை சட்டமாக நிறைவேற்றக் கோரி கையெழுத்து இயக்கம் நடந்தது.
வட்டார தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட செயலாளர் காந்தி, மாவட்டத் துணைத் தலைவர் நவநீதி கிருஷ்ணன், மாவட்ட இணைச்செயலாளர் சுரேந்தர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூ., கடலாடி மேற்கு தாலுகா குழு உறுப்பினர் சிவன் பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

