/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி ஜன.11 வடைமாலை வழிபாடு
/
கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி ஜன.11 வடைமாலை வழிபாடு
கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி ஜன.11 வடைமாலை வழிபாடு
கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி ஜன.11 வடைமாலை வழிபாடு
ADDED : ஜன 02, 2024 05:15 AM
பரமக்குடி: பரமக்குடி அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா ஜன.6ல் சஹஸ்ர தீப வழிபாடுகளுடன் துவங்குகிறது.
பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள அனுமன் கோயிலில் அனுமன் புனிதப்புளி ஆஞ்சநேயராக மரமாக நின்று அருள் பாலிக்கிறார். இங்கு ஜன.7 மாலை ராமகிருஷ்ண மாதர் பஜனை மற்றும் திருவிளக்கு வழிபாடு நடக்கிறது.
மறுநாள் காலை 10:30 மணிக்கு ஹோமம் நிறைவடைந்து, சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மாலை 6:00 மணிக்கு மின்சார தீப அலங்கார ரதத்தில் அனுமன் வீதி உலா நடக்கிறது. ஜன.9ல் புஷ்ப கேடயத்தில் ஆஞ்சநேயர் வீதி வலம் வருகிறார்.
முக்கிய நிகழ்வாக அனுமன் ஜெயந்தி விழா ஜன.11 காலை 12:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், ஸ்ரீ வைஷ்ணவ சபையாரின் விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் மற்றும் அனுமன் வீதி உலா நடக்க உள்ளது. அன்று முழுவதும் பக்தர்கள் வடை மாலை சாற்றி வழிபாடு நடத்துகின்றனர்.
மறுநாள் உற்ஸவ சாந்தி மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.