
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி, : பரமக்குடி அனுமார் கோதண்ட ராமசாமி கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி வீதி உலா நடந்தது.
பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள அனுமார் கோயிலில் மூலவராக புளிய மரம் உள்ளது. இங்கு அனுமன் புனிதப் புளி ஆஞ்சநேயராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மார்கழி மாத விழா நடக்கும் நிலையில் நேற்று முன்தினம் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலையில் அனுமன் சர்வ அலங்காரத்தில் வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தேங்காய் உடைத்து தரிசனம் செய்தனர்.

