/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரம் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சி
/
ரெகுநாதபுரம் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சி
ரெகுநாதபுரம் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சி
ரெகுநாதபுரம் பகுதியில் பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் மகிழ்ச்சி
ADDED : டிச 16, 2024 07:04 AM

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பனங்கிழங்கு விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் கிடைக்கும் பனம்பழங்களை சேகரித்து பனைவிதைகளை உரிய முறையில் சேகரித்து மண்ணில் புதைத்து பராமரித்து வந்த நிலையில் பனங்கிழங்கள் தற்போது விளைச்சலுக்கு வந்துள்ளது.
ரெகுநாதபுரம் பனங்கிழங்கு மொத்த வியாபாரி தர்மராஜ் கூறியதாவது:
ரெகுநாதபுரம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து விவசாயிகள் தென்னந்தோப்புகள் மற்றும் வீட்டருகே உள்ள மணற்பாங்கான பகுதிகளில் பனங்கிழங்குகளை சேகரித்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். 100 கிழங்குகள் ரூ.300 முதல் 350 வரை தரத்திற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்கப்படும் பனங்கிழங்குகள் ராமநாதபுரம், பரமக்குடி, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். மருத்துவ குணம் நிறைந்த பனங்கிழங்குகளின் மகிமை அறிந்தவர்கள் அவற்றை அவிழ்த்தும், நெருப்பில் சுட்டும் சாப்பிடுகின்றனர்.
பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு இன்னும் அதிகமான பனங்கிழங்கு விளைச்சலை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றார்.