ADDED : ஜன 21, 2025 05:38 AM
திருவாடானை: திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் முதுகுளத்துார் ஆகிய இடங்களில் நெற்பயிர்கள் மழையால் நீரில் மூழ்கியதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் கடந்த இரு நாட்களாக மழை பெய்ததால் நெற்கதிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.
இது குறித்து திருவாடானை கவாஸ்கர், ஆர்.எஸ்.மங்கலம் வீரமணி கூறியதாவது:
நெற்கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் முதல் பெய்த தொடர் மழையால் அரும்பூர், தோட்டாமங்கலம், ஆர்.எஸ்.மங்கலம், சனவேலி என பெரும்பாலான கிராமங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கியுள்ளது.
வேளாண்மை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு பயிர்க்கடனை தள்ளுபடி செய்து, பாதிப்பிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.
முதுகுளத்துார்: முதுகுளத்துார் பகுதியில் தேரிருவேலி, கீழத்துாவல்,சாத்தனுார், நல்லுார்,கீரனுார்,ஏனாதி,இளஞ்செம்பூர், பூக்குளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெற்பயிர்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.