ADDED : ஜன 25, 2026 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: திருவாடானை தாலுகாவில் அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று பெய்த சாரல் மழையால் வயல்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் சாய்ந்தது.
நிலம் சேறும் சகதியுமாக இருப்பதால் அறுவடை இயந்திரங்களை வயலுக்குள் கொண்டு செல்லமுடியாமல் பணிகள் முடங்கியுள்ளன.
விவசாயிகள் கூறுகையில், கடன் வாங்கி விவ சாயம் செய்த நிலையில் அறுவடை நேரத்தில் மழை பெய்வதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழையில் நனைந்த நெல்லை ஈரப்பதம் நிபந்தனையின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

