/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் பகுதியில் அறுவடை பணி
/
முதுகுளத்துார் பகுதியில் அறுவடை பணி
ADDED : ஜன 18, 2025 06:50 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட தேரிருவேலி, கீழத்துாவல், சாத்தனுார், நல்லுார், கீரனுார், ஏனாதி, இளஞ்செம்பூர், பூக்குளம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நெல் விவசாயம் செய்தனர். நடப்பாண்டில் 20 ஆயிரம் ஏக்கருக்கு அதிகமாக நெல் விவசாயம் செய்தனர். பருவமழை பொய்த்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.20 நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் ஊருணி, கண்மாயில் மழைநீர் தேங்கியது.
விவசாய நிலத்தில் தேங்கிய தண்ணீரால் நெற்பயிர்கள் நன்கு வளர தொடங்கியது. தற்போது முதுகுளத்துார் வெண்ணிர்வாய்க்கால், செல்வநாயகபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் இயந்திரம் மூலம் நெற்பயிர்கள் அறுவடை நடக்கிறது. ஒரு சில கிராமங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது.