/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடற்கரையில் கிடந்த தலையில்லாத உடல் 7 மாதங்களாக விசாரணை
/
கடற்கரையில் கிடந்த தலையில்லாத உடல் 7 மாதங்களாக விசாரணை
கடற்கரையில் கிடந்த தலையில்லாத உடல் 7 மாதங்களாக விசாரணை
கடற்கரையில் கிடந்த தலையில்லாத உடல் 7 மாதங்களாக விசாரணை
ADDED : அக் 06, 2024 03:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : ராமநாதபுரம் மாவட்டம் பாசிபட்டினம் கடற்கரையில் தலையில்லாமல் ஒதுங்கிய உடல் குறித்து ஏழு மாதங்களாகியும் விசாரணை தொடர்கிறது.
தொண்டி அருகே பாசிபட்டினம் கடற்கரையில் ஏப்.9ல் தலையில்லாமல் உடல் ஒதுங்கியது. அழுகிய நிலையில் ஆணா, பெண்ணா என அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. யார் அவர், எந்த ஊர், கொலை செய்யப்பட்டாரா என்ற விபரம் தெரியவில்லை.
அந்தப்பக்கமாக சென்ற மீனவர்கள் தேவிபட்டினம் மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்தனர். தற்போது இந்த வழக்கு எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றப்பட்டது. இன்ஸ்பெக்டர் சவுந்தரபாண்டியன் விசாரிக்கிறார்.