ADDED : செப் 24, 2026 01:03 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சுவச்ச தாஹி சேவா இயக்கம் சார்பில் மாதவிடாய் சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் பாஸ்கர் தலைமை வகித்தார். வாய்ஸ் டிரஸ்ட் இயக்குநர் முருகேசன் முன்னிலை வகித்தார்.
பேராசிரியர் பானுப் பிரியா வரவேற்றார். அப்போது கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் மெய்காயத்ரி கூறியதாவது:
மாதவிடாய் காலத்தில் தனிநபர் சுகாதாரத்தை பேணுதல், சுகாதாரத் துண்டுகள் முறையாக பயன்படுத்துதல், அகற்றுதல், மாதவிடாய் தொடர்பான பொதுவான சந்தேகங்களுக்கு மருத்துவ ரீதியான விளக்கங்கள், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
மாதவிடாய் என்பது இயற்கையான உடலியல் நிகழ்வு என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ளவும், அதனை சுற்றியுள்ள தயக்கம் மற்றும் தவறான நம்பிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார்.
பேராசிரியர் ஜெயராணி நன்றி கூறினார்.
மாணவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
