/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டியில் செப்.6ல் நலம் காக்கும் முகாம்
/
தொண்டியில் செப்.6ல் நலம் காக்கும் முகாம்
ADDED : செப் 01, 2025 10:16 PM
தொண்டி : மக்களுக்கு இலவசமாக உடல் பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் துவங்கப்பட்டுள்ளது. தொண்டியில் செப்.6ல் நடைபெற உள்ளது.
இது குறித்து தொண்டி ஆரம்பசுகாதார வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி கூறியதாவது:
தொண்டி அமீர்சுல்தான் பள்ளி வளாகத்தில் இம்முகாம் செப்.,6 ல் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடைபெறும். இதில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், எக்ஸ்ரே, இசிஜி, சிறுநீரகம் செயல்பாடு உள்பட முழுமையான உடல் பரிசோதனை செய்யப்படும்.
இது தவிர உயர் சிறப்பு மருத்துவத்துறை ஆலோசனைகள் வழங்கப்படும். நகர்புறங்களில் கிடைக்கும் மருத்துவ சேவை கிராமப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அரசு இத் திட்டத்தை துவக்கியுள்ளதால் மக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.