/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆலங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத் துறையினர் ஆய்வு
/
ஆலங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத் துறையினர் ஆய்வு
ஆலங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத் துறையினர் ஆய்வு
ஆலங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத் துறையினர் ஆய்வு
ADDED : நவ 11, 2024 04:02 AM
சாயல்குடி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சாயல்குடி அருகே எஸ். ஆலங்குளத்தில் காய்ச்சல் பாதிப்பு குறித்து சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.
சாயல்குடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அதிக அளவில் காய்ச்சல் பாதிப்பு உள்ளது. குறிப்பாகஎஸ்.வாகைக்குளம் ஊராட்சியில் உள்ள எஸ்.ஆலங்குளத்தில் காய்ச்சலால் 25க்கும் மேற்பட்டோர் பாதிப்பு பற்றிய செய்தி தினமலர் நாளிதழில் வெளியானது.
இதன் எதிரொலியாக எஸ்.ஆலங்குளத்தில் வீடுகள் தோறும் மருத்துவ சுகாதாரத்துறையினர்ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். தண்ணீர் தேங்கியுள்ள இடங்களை துாய்மையாக வைத்திருக்கவும், கிணறுகளில் 'அபேட்' மருந்து மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளித்தும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
காய்ச்சல் பாதிப்புக்குள்ளானவர்களிடம் ரத்தமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருந்து மாத்திரைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது. செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.