/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சுகாதாரக்கேடு
/
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சுகாதாரக்கேடு
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சுகாதாரக்கேடு
மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடத்தில் சுகாதாரக்கேடு
ADDED : மார் 17, 2025 08:03 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட 500 படுக்கைகள் கொண்டகட்டத்தில் கழிவு நீர் வழிந்து சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரூ.154.84 கோடியில் 5 தளங்கள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டடத்தை 2023 ஆக., அமைச்சர் சுப்பிரமணியன் திறந்து வைத்தார். கட்டடம் திறந்த நாளில் இருந்து பல்வேறு புகார்கள் எழுந்துள்ளது.
மழை பெய்யும் நேரத்தில் மழை நீர் செல்வதற்கான முறையான ஏற்பாடு இல்லாததால் மருத்துவமனை வளாக கட்டடத்தில் முதல் தளத்தில் தண்ணீர் தேங்கியது. இதுவரை சரி செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் அனைத்தும் 5 தளங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் குழாய்கள் முதல் தளத்தில் கொண்டு வரப்பட்டு கால்வாய்களின் மூலம் வெளியேற்றப்படுகிறது.
இதில் தொடர்ந்து அடைப்புகள் ஏற்பட்டு முதல் தளத்தில் கழிவு நீர் ஆறாக பெருக்கெடுக்கும் நிலை உள்ளது.
இந்த பகுதியில் தான் நோயாளிகள் வார்டுகளுக்கு செல்வதற்கும் மற்ற தளங்களுக்கு செல்லவும் முடியும்.
முதல் தளத்தில் வெளி நோயாளிகள் வருவதால் மிகவும் சிரமப்படுகின்றனர். முதல் தளத்தில் ரத்த பரிசோதனை அறை, மருந்து, மாத்திரைகள் வழங்கும் பகுதிகள் உள்ளன.
இப்பகுதிகளில் பணியாளர்கள் பணி செய்ய முடியவில்லை. நோயாளிகள் நோய் பரப்பும் நிலையமாக அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவனை புதிய கட்டடம் உள்ளது.
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து கழிவு நீரை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.-----