ADDED : நவ 24, 2024 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் சுகாதார மேலாண்மை பயிற்சி நடந்தது.
முதல்வர் பாண்டிமாதேவி தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது முன்னிலை வகித்தார். இளம்பெண்கள் மேற்கொள்ள வேண்டிய சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சாப்பிடும் சத்துணவுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
பயிற்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். உடன் வட்டார இயக்க மேலாளர் அரசகுமார், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் அருள்தாஸ், ராமசாமி உட்பட பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.