/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வெப்ப அலை தடுப்பு ஆலோசனை கூட்டம்
/
வெப்ப அலை தடுப்பு ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 22, 2025 02:48 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் வெப்ப அலை தடுப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். வெப்ப அலை தாக்கம் தடுப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுற்றுச்சுழல் துறை மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை, வனத்துறை ஆகிய துறை அலுவலகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வெப்ப அலை காலத்தில் பாதுகாப்புடன் இருப்பதற்கு ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் சுற்றுச்சுழல் குழு அலுவலர் சபரிஷா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்து கழுவன், பேரிடர் மேலாண்மை தாசில்தார் சரவணன், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

