தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழை: மின்தடையால் மக்கள் அவதி

பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழை: மின்தடையால் மக்கள் அவதி

பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கன மழை: மின்தடையால் மக்கள் அவதி


UPDATED : ஜூன் 20, 2026 09:48 PM

ADDED : ஜூன் 20, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 20, 2026 09:48 PM ADDED : ஜூன் 20, 2026 09:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பரமக்குடி: பரமக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்த நிலையில் தொடர் மின் தடையால் மக்கள் அவதிக்குள்ளாகினர்.

பரமக்குடியில் கடந்த சில நாட்களாக காற்றுடன் மழை பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு துவங்கிய மழை ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. அப்போது சூறைக்காற்று வீசிய நிலையில் ஆங்காங்கே இருந்த பிளக்ஸ் போர்டுகள் மின் வயர்களில் உரசின. இதே போல் சிறிய மரங்கள் சாய்ந்ததால் மின்தடை ஏற்பட்டது.

இரவு 8:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை அதிகாலை 1:00 மணி வரை நீடித்தது. மின் ஊழியர்கள் மின் இணைப்புகளை சரி செய்த பின் ஒவ்வொரு பகுதியாக மின் சப்ளை வழங்கப்பட்டது. இச்சூழலில் வேந்தோணி கிராமப் பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு ஏற்பட்ட மின்தடை நள்ளிரவுக்கு மேல் சரி செய்யப்பட்டது.

இதே போல் பல்வேறு கிராமங்களில் தொடர் மின்தடையால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர். ஆகவே தொடர் மின் தடையை சீர் செய்ய மின்வாரிய ஊழியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us