/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துாரில் பலத்த மழை தெருக்களில் தேங்கிய தண்ணீர்
/
முதுகுளத்துாரில் பலத்த மழை தெருக்களில் தேங்கிய தண்ணீர்
முதுகுளத்துாரில் பலத்த மழை தெருக்களில் தேங்கிய தண்ணீர்
முதுகுளத்துாரில் பலத்த மழை தெருக்களில் தேங்கிய தண்ணீர்
ADDED : ஏப் 06, 2025 05:22 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பெய்த மழையால் தெருக்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடப்பதற்கு சிரமப்பட்டனர்.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
காலை 11:00 மணிக்கு மேல் வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
முதுகுளத்துார் அருகே காக்கூர், கருமல், தேரிருவேலி, வெண்ணீர்வாய்க்கால் உள்ளிட்ட கிராமங்களில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை பெய்தது.
இதனால் பருத்தி, மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் முதுகுளத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு தெருக்களில் தண்ணீர் தேங்கி சேறும் சகதிகமாக மாறியது. இதனால் மக்கள் நடப்பதற்கு சிரமப்பட்டனர்.