/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை
/
ராமநாதபுரத்தில் கன மழை: பள்ளிகளுக்கு விடுமுறை
ADDED : டிச 13, 2024 04:10 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்கிறது. நேற்று முன்தினம் இரவு முதல் மாலை வரை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. பள்ளிகளுக்கு மட்டும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.
ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் (டிச.11) காலை 6:00 முதல் நேற்று காலை 6:00மணி வரை 24 மி.மீ., திருவாடானை 35 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் 32 மி.மீ., தொண்டி 38.20 மி.மீ., பரமக்குடி 32.40 மி.மீ., என மாவட்டத்தில் 349 மி.மீ., மழை பதிவானது.
ராமநாதபுரம் நகர், சக்கரக்கோட்டை, பட்டணம்காத்தான் ஊராட்சியில் மழை நீர் வடிகால்கள் பராமரிப்படாமல் உள்ளதால் மழை நீர் செல்ல வழியின்றி குளம்போல ரோடுகள், தாழ்வான பகுதிகளில் தேங்கியது. பழைய பஸ் ஸ்டாண்டில் தேங்கியதால் பயணிகள் சிரமப்பட்டனர்.