/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் வெளி மாவட்ட பஸ்களை முறைப்படுத்த வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
/
கீழக்கரை நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் வெளி மாவட்ட பஸ்களை முறைப்படுத்த வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
கீழக்கரை நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் வெளி மாவட்ட பஸ்களை முறைப்படுத்த வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
கீழக்கரை நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசல் வெளி மாவட்ட பஸ்களை முறைப்படுத்த வேண்டும் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை
ADDED : ஜன 01, 2026 05:23 AM
கீழக்கரை: கீழக்கரை நகருக்குள் அதிக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வெளி மாவட்ட பஸ்களை முறைப்படுத்த வேண்டும் என நகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தினர்.
கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் செஹானாஸ் ஆபிதா தலைமை வகித்தார். கமிஷனர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். துணை சேர்மன் ஹமீது சுல்தான் வரவேற்றார். கணக்காளர் தமிழ்ச்செல்வன் தீர்மானங்களை வாசித்தார்.
பாதுஷா: கிழக்கு கடற்கரை சாலையில் விபத்து ஏற்படுத்தக்கூடிய இடங்களை கண்டறிந்து அவற்றில் உரிய முறையில் வேகத்தடை ஏற்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சூரியகலா: வார்டு பகுதிகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்.
கிணறுகளில் அபேட்டு மருந்து தெளிக்க வேண்டும். அரசு மருத்துவமனை வளாகத்தில் சீமைக் கருவேலமரங்கள் வளர்ந்துள்ளது. அங்கன்வாடி மையம் அருகே ஹைமாஸ் விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. இரவு 7:00 மணிக்கு மேல் பஸ் ஸ்டாண்ட் பகுதிக்குள் பொதுமக்கள் அச்சத்துடன் நடமாட வேண்டியுள்ளது.
ஏற்கனவே இடிக்கப்பட்ட இடத்தில் உள்ள மீன்கடைகளை மீண்டும் கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பைரோஸ் பாத்திமா: எனது வார்டில் இருள் சூழ்ந்துள்ளது.
வாறுகால் மூடி அடிக்கடி சேதம் அடைகிறது. தரமான வாறுகால் மூடி அமைக்க வேண்டும் என்றார்.
மீரான் அலி : கீழக்கரை நகர் பகுதிக்குள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பஸ்கள் வந்து செல்கின்றன. இதனால் காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்.
காஜா முஹம்மது சுஐபு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் தோண்டப்பட்ட தெருக்களில் சேதமடைந்த சாலையை நகராட்சி சார்பில் ஆய்வு செய்து இவற்றை சரி செய்ய வேண்டும்.
செஹானாஸ் ஆபிதா, தலைவர்: டிராபிக் போலீஸ் வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மனு கொடுத்துள்ளோம். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.
சேக் உசேன் : கடந்த கூட்டத்தில் பேசிய பிரச்னைகளுக்கு என்ன தீர்வு காணப்பட்டுள்ளது. 1 முதல் 21 வார்டுகளுக்கு ரூ.2.5 லட்சத்தில் பராமரிப்புக்கான தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
அதை சம்பந்தப்பட்ட கவுன்சிலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
ஏற்கனவே இருந்த மீன் மார்க்கெட் பகுதியில் வியாபாரிகளின் நலன் கருதி அவர்களாகவே தற்காலிக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

