/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதுமைப் பெண் திட்டத்தில்3161 மாணவிகளுக்கு உதவி
/
புதுமைப் பெண் திட்டத்தில்3161 மாணவிகளுக்கு உதவி
ADDED : பிப் 10, 2024 11:48 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் 3161 மாணவிகளுக்கு உயர்கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம் புதுமைப்பெண் என்ற பெயரில் அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து கல்லுாரி, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
ஐ.டி.ஐ.,களில் படிக்கும்மாணவிகள் 6 முதல் 8ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. இத்திட்டத்தில் மாவட்டத்தில் மூன்று கட்டங்களாக இதுவரை 3161 மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.
இவர்கள் அரசு கலை அறிவியல் கல்லுாரி, மருத்துவக் கல்லுாரி, விவசாயக் கல்லுாரி மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படிப்பதாக கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.