ADDED : ஏப் 08, 2026 09:57 PM
அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் அண்ணா நகரில் உள்ள நாகா மெட்ரிக் பள்ளியில் மூலிகை இலைகளை பயன்படுத்தி 300 உணவு வகைகளை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி தலைமை வகித்தார். தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலர் ஜெயந்தி முன்னிலை வகித்தார். தாளாளர் வெண்மதி நாதன் வரவேற்றார்.
இயற்கை பாரம்பரிய மரபு வேளாண் விஞ்ஞானி நடேசன் சின்னையா, ராமமூர்த்தி, கணேச பாண்டியன், கலாம் உலக சாதனை நிறுவனர் குமரவேல், தலைமை நிர்வாக அதிகாரி ஐஹிரி, பள்ளி முதல்வர் வனிதா உட்பட ஏராளமான ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர். மூலிகை இலைகளின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. கலாம் உலக சாதனை விருது பள்ளிக்கு வழங்கப்பட்டது.
