/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி ஜரூர்
/
களைக்கொல்லி மருந்து தெளிக்கும் பணி ஜரூர்
ADDED : அக் 09, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : திருத்தேர்வளை, ராதானுார், சாத்தனுார், நத்தக்கோட்டை, கூடலுார், கோவிந்தமங்கலம், பச்சனத்திக் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழைக்கு, வயல்களில் விதைப்பு நெல் விதைகள் முளைத்துள்ளன.
வயல்வெளிகளில் நெற்பயிர்கள் முளைத்துள்ளதை தொடர்ந்து ஈரப்பதத்தை பயன்படுத்தி களைகளை கட்டுப்படுத்த களைக்கொல்லி மருந்து தெளிக்கப்படுகிறது.
கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தி தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.