/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரூ.53 கோடி ஹெராயின் இலங்கையில் சிக்கியது
/
ரூ.53 கோடி ஹெராயின் இலங்கையில் சிக்கியது
ADDED : அக் 19, 2025 02:19 AM

ராமேஸ்வரம்: இலங்கையில் படகில் கடத்தி வந்த, 53 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை அந்நாட்டு கடற்படையினர் பறிமுதல் செய்து, ஐவரை கைது செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்பு அருகே நடுக்கடலில் ரோந்து சுற்றிய அந்நாட்டு கடற்படை வீரர்கள் சந்தேகத்திற்கிடமான ஒரு படகை மடக்கி பிடித்து சோதனையிட்டனர். அதில், இரு மூட்டைகளில் போதை பொருளான, 53 கிலோ ஹெராயின் இருந்தது.
இதையடுத்து, படகில் இருந்த இலங்கை கடத்தல்காரர்கள் ஐவரையும் கைது செய்து, கொழும்பு அருகே கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தனர். பின், ஹெராயின் பவுடர், இரு ஜி.பி.எஸ்., கருவிகளுடன் கடத்தல்காரர்களை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அவை, கேரளா, கன்னியாகுமரி அல்லது வெளிநாடுகளில் இருந்து கடத்தி வந்திருக்கலாம் என, தெரிகிறது. இதன் சர்வதேச மதிப்பு, 53 கோடி ரூபாய். கடத்தல்காரர்கள் ஐந்து பேரும், கொழும்பு வெளிக்கடை சிறையில் அடைக்கப்பட்டனர்.