/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உயர்நீதிமன்றம் உத்தரவு நீர்தேக்கத் தொட்டி இடிப்பு
/
உயர்நீதிமன்றம் உத்தரவு நீர்தேக்கத் தொட்டி இடிப்பு
ADDED : ஜன 03, 2024 05:55 AM
திருவாடானை: சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவின் படி திருவாடானையில் ஆபத்தான நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட்டது.
திருவாடானை அண்ணாநகரில் 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நீர்த் தேக்க தொட்டி இருந்தது. அது சேதமடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
துாண்களில் உள்ள கம்பிகள் பலம் இழந்தது. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியாக இருந்ததால் உயிர் பலி அபாயம் ஏற்பட்டது.
எனவே இந்த நீர்த் தேக்க தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று தொண்டியை சேர்ந்த வக்கீல் கலந்தர் ஆசிக் அகமது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதிகள், விசாரணை செய்து நீர்தேக்க தொட்டியை இடிக்க உத்தரவிட்டனர்.
இதையடுத்து திருவாடானை ஊராட்சி நிர்வாகம் சார்பில் இயந்திரம் மூலம் நீர்த்தேக்க தொட்டி இடித்து அப்புறப்படுத்தப்பட்டது.