ADDED : அக் 25, 2025 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம், தினைக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர் மணிவண்ணன் வரவேற்றார்.
தலைமை ஆசிரியர் டேவிட் மோசஸ் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அருண்நேரு, வளர்ந்து வரும் 'ஏஐ' தொழில்நுட்பம் பற்றியும், உலகளாவிய வேலை வாய்ப்புகள் பற்றியும் ஆலோசனை வழங்கினார். உயர் கல்வி படிப்பை எதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது குறித்து மாவட்ட இளம் தொழில் முனைவோர் சுமதி விளக்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

