/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வழிகாட்டி: கல்லுாரி களப்பயணம்
/
பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வழிகாட்டி: கல்லுாரி களப்பயணம்
பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வழிகாட்டி: கல்லுாரி களப்பயணம்
பள்ளி மாணவர்கள் உயர் கல்வி வழிகாட்டி: கல்லுாரி களப்பயணம்
ADDED : செப் 05, 2025 11:18 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தில் கல்லுாரி களப்பயணம் துவக்கவிழா நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்து மாணவர்களின் கல்லுாரி களப்பயணத்தை துவக்கி வைத்தார். நடப்பு கல்வியாண்டில் 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 2079 மாணவர் களை 13 கல்லுாரிகளுக்கு அதாவது மருத்துவம், பொறியியல், சட்டக் கல்லுாரி, கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று பாடத்திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்படுகின்றன.
இதன்மூலம் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் உயர்கல்வியில் படிப்பதற்கு ஆர்வ முடன் செயல்படுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மேல்நிலைக்கல்வி உதவி திட்ட அலுவலர்கள் கண்ணன், கணேசபாண்டியன், பள்ளி தலைமையாசிரியர் ஜோவிக்டோரியா, மாவட்ட உயர்கல்வி வழிகாட்டி ஒருங்கிணைப் பாளர்கள் பங்கேற்றனர்.