ADDED : செப் 29, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் உயர்கல்வி பயில்வதற்கான சிறப்பு முகாம் இன்று (செப்.,30) நடக்கிறது.
இதில் 2024–25, 2025–26ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தற்போது வரை உயர்கல்வியில் சேர்க்கை பெறாத மாணவர்கள் பங்கேற்கலாம். இம்முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் உடனடி சேர்க்கை செய்ய தயாராக உள்ளனர்.
கல்வி கடன் பெறுவதற்கான வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். முகாமிற்கு வரும் மாணவர்கள் அசல் கல்விச் சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் கொண்டு வர வேண்டும் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்தார். ––
