/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உயர்கல்வி பயிற்றுவித்தல் மேம்பாட்டு பயிற்சி முகாம்
/
உயர்கல்வி பயிற்றுவித்தல் மேம்பாட்டு பயிற்சி முகாம்
உயர்கல்வி பயிற்றுவித்தல் மேம்பாட்டு பயிற்சி முகாம்
உயர்கல்வி பயிற்றுவித்தல் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ADDED : பிப் 05, 2025 05:06 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரியில் ஜன.,1 முதல் பிப்.,1 வரை உயர்கல்வி மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். விருந்தினராக தமிழ்நாடு ஐ.சி.டி., அகாடமி ஆசிரியர் பயிற்றுநர் அருள்ஜோதி உயர்கல்வி வகுப்பு பயிற்றுவிப்பு முறைகள், உளவியல் அடிப்படையில் செயல்முறை விளக்கங்களுடன் பயிற்சி அளித்தார்.
வேலுமனோகரன் மகளிர் கலைக்கல்லுாரி, முகமது சதக் பொறியியல் கல்லுாரி உள்ளிட்ட கல்லுாரிகளின் பேராசிரியர்கள் பங்கேற்றனர். கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி, செய்யது அம்மாள் அறக்கட்டளை மருத்துவமனை டாக்டர் பாத்திமா சானாஸ் ஆகியோர் பேராசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
ஏற்பாடுகளை கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் மகிமா, நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வையாளர் சபியுல்லா செய்தனர்.