ADDED : மே 11, 2026 11:41 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் இந்திரா நகர் பகுதியில் ஹைமாஸ் விளக்கு வெளிச்சமின்றி பயனற்ற நிலையில் உள்ளதால் இரவில் பயணிகள் பாதிப்படைகின்றனர்.
திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, உப்பூர் விலக்கு, இந்திரா நகரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைமாஸ் விளக்கு அமைக்கப்பட்டது.
இதன் மூலம் அப்பகுதியினரும், அவ்வழியாக செல்லும் பாதசாரிகளும் பயனடைந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக ஹைமாஸ் விளக்கு பழுதடைந்துள்ளதால் இரவில் அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளது.
இதனால், உப்பூர் பிரிவு சாலையை கடக்க முற்படும் வாகன ஓட்டிகளும், பயணிகளும் விபத்துகளில் சிக்குகின்றனர். மேலும், வெளியூர் சென்று விட்டு இரவில் அப்பகுதியை கடக்கும் பெண் பயணிகளும், இருளால் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஹைமாஸ் விளக்கை சீரமைக்க மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
