ADDED : பிப் 10, 2025 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை, மேல்பனையூர் பாலம் விலக்கிலிருந்து ஆனந்துார் ரோடு விரிவாக்கப் பணி நடக்கிறது. ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ., ரோடு இரு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்வதற்கான பணிகளும் நடக்கின்றன.
பணியின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கீதா ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைவாக முடிக்க வலியுறுத்தினார். இளநிலை பொறியாளர் லட்சுமணன் உட்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

