தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஹிந்து முன்னணி , பா.ஜ., நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

ஹிந்து முன்னணி , பா.ஜ., நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்

ஹிந்து முன்னணி , பா.ஜ., நிர்வாகிகளுக்கு வீட்டுக்காவல்


ADDED : நவ 23, 2026 05:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2026 05:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தி இன்று (நவ.,23) நடைபயணம் செல்ல முயன்ற பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ததை கண்டித்து பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் ராமேஸ்வரத்தில் இன்று நடைபயணம் செல்ல திட்டமிட்டிருந்தனர். பா.ஜ., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட அமைப்பாளர் வராகி முத்துராஜ் தலைமையில் 4 பேர் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து திருப்பரங்குன்றத்திற்கு நடைபயணம் செல்ல திட்டமிட்டனர். மண்டபம் போலீசார் முத்துராஜை வீட்டுக்காவலில் வைத்தனர்.

மேலும், நடைபயணம் செல்ல முயன்ற ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, நகர் செயலாளர் மேகநாதன், மாவட்ட செயலாளர் காளீஸ்வரன்,

'வீ த லீடர்ஸ்' அமைப்பை சேர்ந்த உறுப்பினர்கள் கதிரவன், சரவணன், கார்த்திக், விஷ்வ ஹிந்து பரிஷத் நகர் தலைவர் குமார் ஆகியோரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதித்த தமிழக அரசு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முட்டுக்கட்டை போடுகிறது. தீபம் ஏற்றினால் கலவரம் வெடிக்கும் எனக் கூறும் ஒருதரப்பினர் மீது, த.வெ.க., அரசு நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன். ஹிந்துக்களுக்கு இந்த அரசு துரோகம் செய்துள்ளது. வரும் காலத்தில் மக்கள் இதற்கு தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றார். –––

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us