/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசில் பொன்முடி மீது ஹிந்து முன்னணி புகார்
/
போலீசில் பொன்முடி மீது ஹிந்து முன்னணி புகார்
ADDED : ஏப் 14, 2025 05:11 AM

ராமேஸ்வரம்: -ஹிந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய கோரி ராமேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷனில் ஹிந்து முன்னணியினர் புகார் செய்தனர்.
ஏப்., 11ல் அமைச்சர் பொன்முடி, ஹிந்து மதத்தில் சைவம், வைணவம் மதத்தினர் நெற்றியில் விபூதி பூசும் அடையாள குறியீடுகளை ஆபாசமாக பேசி பெண்களை கொச்சைப்படுத்தியும், ஹிந்துக்கள் மனதை புண்படுத்தி பேசினார்.
இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி தலைவர் ராமமூர்த்தி, ராமேஸ்வரம் துறைமுகம் போலீசாரிடம் அளித்த புகார் மனுவில்: ஹிந்துக்களின் மத நம்பிக்கையை ஆபாசமாக பேசி, பெண்களை இழிவுபடுத்தி தமிழக அமைச்சரவைக்கு அவப்பெயர் ஏற்படுத்திய பொன்முடியை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதனால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாக மதமோதலை துாண்டியும், ஹிந்துக்கள் மனதை புண்படுத்திய அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திருப்புல்லாணி: இதுபோல் ஹிந்து முன்னணியின் திருப்புல்லாணி ஒன்றிய தலைவர் கிஷோர் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்தனர்.

