/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஹிந்து முன்னணி போராட்டம் அறிவிப்பு
/
ஹிந்து முன்னணி போராட்டம் அறிவிப்பு
ADDED : ஜன 13, 2024 04:43 AM
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில்உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவது வழக்கம்.
ஆனால் கோயில் ரதவீதி, சன்னதி தெரு, கிழக்குத் தெரு, உண்டியல் கூடத் தெரு, புது தெருவில் உள்ள தங்கும் விடுதிகள், உணவு ஓட்டலில் இருந்து வெளியேறும் திடக்கழிவு மற்றும் கழிவு நீர் நேரடியாக அக்னி தீர்த்த கடலில் கலக்கிறது.
இதனால் அக்னி தீர்த்தம்மாசுபடுவதுடன், பக்தர்களுக்கு அலர்ஜி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனை தடுக்க நகராட்சி அதிகாரியிடம் பலமுறை வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. இதனை கண்டித்து ஹிந்து முன்னணியினர் போராட்டம் நடத்த உள்ளனர்.
ஹிந்து முன்னணி ராமநாதபுரம் மாவட்ட தலைவர் ராமமூர்த்தி கூறியதாவது:
நகராட்சி நிர்வாகத்தின் ஆசியுடன் இங்குள்ள தங்கும் விடுதி, ஓட்டலில் இருந்து வெளியேறும் கழிவு நீர் புனித அக்னி தீர்த்தத்தில் கலக்கிறது. இதனால் தீர்த்தம் மாசுபட்டு களங்கம் ஏற்பட்டுஉள்ளது. கழிவு நீர் கலப்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது கண்டனத்திற்குரியது.
இதனை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு குப்பை கொட்டும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.