UPDATED : அக் 11, 2026 07:09 PM
ADDED : அக் 11, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகில் ஹிந்து முன்னணி சார்பில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சக்திவேல், சேர்மன், திருவருட்செல்வம், காளீஸ் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் முத்துகுமார் கண்டன உரையாற்றினார். இதில் நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் தீபத் துாணில் தீபம் ஏற்ற மாநில அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மேகநாதன், வட்டார, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். –––
