/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஏர்வாடியில் டாஸ்மாக்கை அகற்ற ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
/
ஏர்வாடியில் டாஸ்மாக்கை அகற்ற ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ஏர்வாடியில் டாஸ்மாக்கை அகற்ற ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ஏர்வாடியில் டாஸ்மாக்கை அகற்ற ஹிந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 24, 2024 04:29 AM

கீழக்கரை: ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலும், விநாயகர் கோயில் முன்பும் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக்கோரி ஹிந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏர்வாடியில் பிரதான சாலையில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையால் அப்பகுதியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு குடிமகன்களால் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது, இதனைக் கண்டித்து ஹிந்து முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சக்தி முன்னிலை வகித்தார்.
ஒன்றிய பொதுச் செயலாளர் சிவா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் காளீஸ், திருவருட்செல்வன் உட்பட ஏராளமான ஹிந்து முன்னணி தொண்டர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.