UPDATED : நவ 25, 2026 04:00 PM
ADDED : நவ 25, 2026 04:00 PM
ராமநாதபுரம்:
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. ஆனால் அங்கு தீபம் ஏற்றப்படாததால் ஹிந்து முன்னணி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்ட ஹிந்து முன்னணி நிர்வாகிகள் திருப்பரங்குன்றம் செல்ல விடாமல் தடுக்கப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். ராமநாதபுரம் சோதனைச் சாவடிகளில் பலத்த சோதனைக்கு பின் வாகனங்களை அனுமதித்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹிந்து முன்னணி நிர்வாகிகளை பட்டணம்காத்தான் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தடுத்து நிறுத்தினர். மேலும் தீபம் ஏற்றப்படாததை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, துணை செயலாளர் மேகநாதபாண்டியன் உள்ளிட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். ––
