/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரத்தில் பக்தர்களை ஏமாற்றுவோர் மீது நடவடிக்கை ஹிந்து மகாசபா வலியுறுத்தல்

ADDED : ஜூலை 29, 2025 12:24 AM

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் வரும் பக்தர்களிடம் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத ஹிந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது: தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் புண்ணியபூமியாக ராமேஸ்வரம் உள்ளது. இதன் உபகோயிலானகோதண்ட ராமர் கோயில் அருகே இடத்தை ஆக்கிரமித்து ஒரு அமைப்பை ஏற்படுத்தி கடலில் மிதக்கும் கல் உள்ளது. ராமர் வழிபட்ட சிவலிங்கம் உள்ளதாகபொய்யான தகவல் கூறி மக்களை திசை திருப்பி பணம் வசூலிப்பது வன்மையாக கண்டித்தக்கது.
ராமேஸ்வரம் வரும் பக்தர்களை ஏமாற்றி ஹிந்துக்களின் ஆன்மிகத்தை வியாபாரம் செய்யும் செயலைதடுத்து நிறுத்த தமிழக அரசு, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கைஎடுக்க வேண்டும். இல்லையெனில் ஹிந்துக்களை திரட்டிராமேஸ்வரத்தில் போராட்டம் நடத்துவோம் என்றார்.